Categories
தேசிய செய்திகள்

வேளாண்துறை அமைச்சர் பங்கேற்கவில்லை – விவசாயிகள் எதிர்ப்பு…!!

வேளாண் சட்டங்கள் தொடர்பாக டெல்லியில் மத்திய வேளாண் துறை செயலாளருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர்.

மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை  கண்டித்து கடந்த 20 நாட்களாக பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 29 விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் டெல்லியில் வேளாண் துறை அமைச்சக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இக்கூட்டத்தில் வேளாண்துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் பங்கேற்கவில்லை. இதனால் வேளாண் துறை அமைச்சக செயலாளர் உடன் விவசாய சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு எட்டப்படாததால் விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் வேளாண்துறை அமைச்சர் பங்கேற்காததை  கண்டித்தும் மத்திய அரசை கண்டித்தும் வேளாண் சட்டங்களில் நகல்களைக் கிழித்தெறிந்து தங்களின் எதிர்ப்பை அவர்கள் தெரிவித்தனர்.

Categories

Tech |