Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தாய் தற்கொலை…. 3 நாளில் தந்தை எடுத்த முடிவு…. கேட்பாரற்று போன குழந்தைகள்…!!

மனைவி தற்கொலை செய்து கொண்ட அதே இடத்தில் கணவனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

சென்னையில் இருக்கும் நெற்குன்றத்தில் சேர்ந்தவர்கள் தியாகராஜன்-சத்யா தம்பதியினர். இத்தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த 11ஆம் தேதி நெஞ்சு வலியால் அவதிப்பட்டு வந்த சத்யா, வீட்டின் சமையல் அறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

குடும்பத்தினர் நேற்று முன்தினம் அவரது இறுதி சடங்குகளை நடத்தினர். இந்நிலையில் மனைவி இறந்த சோகத்தில் இருந்த தியாகராஜன் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். இதனால் தனது மனைவி தற்கொலை செய்து கொண்ட அதே இடத்தில் மனைவியின் புடவையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் இச்சம்பவம் தொடர்பாக விசாரித்து வருகின்றனர். தந்தை தாய் என இருவரையும் இழந்து மூன்று குழந்தைகள் கேட்பாரற்று இருப்பது பரிதாபத்துக்குரியது.

Categories

Tech |