கேரளாவை சேர்ந்த புகழ்பெற்ற கவிஞர் உடல்நலக் குறைவினால் மரணமடைந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
கேரளாவை சேர்ந்த புகழ்பெற்ற கவிஞர் அக்கித்தம் அச்சுதன் நம்பூதிரி உடல்நலக் குறைவினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தார். நிமோனியாவால் பாதிக்கப்பட்டு இருந்த அவர் தொடர் சிகிச்சையில் இருந்து வந்த நிலையில் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.
பத்மஸ்ரீ கேந்திர சாஹித்ய அகாடமி என பல்வேறு விருதுகளைப் பெற்ற அச்சுதன் நம்பூதிரி நாடகங்கள், கட்டுரைகள், கவிதைகள், மொழிபெயர்ப்பு, சிறுகதைகள் என பல்வேறு படைப்புகளை இயற்றியுள்ளார்.