மசால் தோசை செய்ய தேவையான பொருட்கள்:
இட்லி மாவு – 1 கப்
தண்ணீர் – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
மசாலா தயாரிக்க:
உருளைக்கிழங்கு – 2
பெரிய வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 2
கடுகு – கால் டீஸ்பூன்
கருவேப்பிலை, எண்ணெய் – தாளிப்பதற்கு
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
உருளைக்கிழங்கை வேகவைத்து எடுத்து கொள்ளவும். அதன் தோல் உரித்து மசித்துக் கொள்ள வேண்டும். வெங்காயம், பச்சைமிளகாய், கருவேப்பிலை பொடியாக நறுக்கி வைக்கவும்.
வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கருவேப்பிலை போட்டு நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்கவும். பின்பு அதனுடன் மஞ்சள்தூள், மசித்த உருளைக் கிழங்கையும் சேர்த்து, உப்பு போட்டு கிளறி விடவும். இப்போது மசாலா தயார்.
அடுப்பில் தோசைக்கல்லை வைத்து காய்ந்ததும், இட்லி மாவை ஊற்றி மெல்லிய தோசையாக வார்த்து ஒன்று அல்லது இரண்டு கரண்டி எண்ணெய் ஊற்றி மூடி வைத்து, ஒரு நிமிடம் கழித்து மூடியை எடுத்தால் தோசை ரெடி.
பிறகு, ஏற்கனவே வைத்திருக்கும் மசாலாவை தோசையின் ஒரு புறத்தில் வைத்து பரப்பி மறுபுறத்தை மடக்கி, எண்ணெய் ஊற்றி திருப்பி போட்டு பொன்னிறமாக வெந்தவுடன் எடுத்து, தேங்காய் சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.