Categories
தேசிய செய்திகள்

அப்துல் கலாம் வாழ்க்கை… கோடிக்கணக்கானவர்களுக்கு நம்பிக்கை… புகழாரம் கூறிய பிரதமர் மோடி…!!!

மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த நாளில் அவரை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி நாட்டின் வளர்ச்சிக்கு அளியாத பங்களிப்பை வழங்கியவர் கலாம் என்று கூறியுள்ளார்.

மக்களின் ஜனாதிபதியான டாக்டர் அப்துல் கலாம் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. அதனையொட்டி அனைத்து தரப்பினரும் அவரின் நினைவுகளை பகிர்ந்து மரியாதை செலுத்திக் கொண்டிருக்கின்றனர். அவரின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “டாக்டர் அப்துல் கலாம் பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்.

இந்தியாவின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்களிப்பை வழங்கியவர் நம் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம். இதனை எப்போதும் மறக்க முடியாது. அவரின் வாழ்க்கை கோடிக்கணக்கான அவர்களுக்கு நம்பிக்கையை அளித்துள்ளது”என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |