Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை முதல் ஆம்னி பேருந்து போக்குவரத்து தொடக்கம்…!!

தமிழகத்தில் நாளை முதல் ஆம்னி பேருந்து போக்குவரத்து மீண்டும் தொடங்கப்படும் என அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாத இறுதியில் பேருந்து போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டன.  இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் ஏழாம் தேதி முதல் தமிழகம் முழுவதும் அரசு விரைவு பேருந்து போக்குவரத்து தொடங்கினர். எனினும் பேருந்துகள் இயக்கப்படாத ஆறு மாத காலத்துக்கு சாலை வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க கோரி ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் ஆம்னி பேருந்து போக்குவரத்தை தொடங்க போவதில்லை என்று அறிவித்தது.

இந்நிலையில் நாளை முதல் ஆம்னி பேருந்து போக்குவரத்து மீண்டும் தொடங்கப்படும் என அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் திரு அன்பழகன் அறிவித்துள்ளார். மத்திய மாநில அரசுகளின் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |