கொடங்குபட்டியை மணப்பாறை தாலுகா உடன் இணைக்க வேண்டும்.
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த கொடங்கு பட்டியில் குழந்தைகளின் கல்வி அரசின் நலத்திட்டங்கள் பெறுவதற்கான சான்றிதழ் வாங்க மருங்காபுரிக்கும் மணப்பாறை என இருவேறு இடங்களில் உள்ள அலுவலகங்களுக்கும் வீணாக அலைய வேண்டி உள்ளதால் கொடங்கப்பட்டி ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு கிராமங்களை சிரமங்களை சந்தித்து வருகின்றனர். மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று கொடங்குபட்டியை மணப்பாறை தாலுகாவில் சேர்க்கக்கோரி கொடங்குபட்டியின் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.