சிண்டாக்ஸ் தண்ணீர் தொட்டி அமைக்கும் 7 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் செலவு செய்ததாக சர்ச்சையில் சிக்கிய திருப்பூர் தெற்கு தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் தற்போது தகர ஷீட்டில் பயணியர் நிழற்குடை அமைக்க 45 லட்சம் ரூபாய் செலவு என விளம்பரப்படுத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து பயணியர் நிழற்குடை அமைக்க பட்டுள்ளது. தகர ஷீட்டில் அமைக்கப்பட்டுள்ள பயணியர் பேருந்து நிறுத்தத்தின் மதிப்பு 45 லட்சம் ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது. போதிய வசதிகள் ஏதுமின்றி அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிறுத்தத்திற்கு 45 லட்சம் ரூபாய் செலவாகி இருக்கிறதா என்று பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சிண்டாக்ஸ் தண்ணீர் தொட்டி அமைக்க 7 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் செலவானதாக புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவின. அந்த பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது பயணிகள் பேருந்து நிறுத்தம் அமைக்க 45 லட்சம் ரூபாய் செலவு மதிப்பீடு அறிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.