Categories
தேசிய செய்திகள்

அமைச்சர் பங்கேற்காததால் பஞ்சாப் விவசாயிகள் எதிர்ப்பு…!!

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்க்கும் விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகள் டெல்லியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது கூட்டத்திலிருந்து பாதியில் வெளியேறினர்.

டெல்லியில் கிருஷிபவன் இல் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 29 விவசாய சங்கம் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் மத்திய வேளாண் துறை செயலாளர் பங்கேற்றார். ஆனால் விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பங்கேற்காததால் விவசாய சங்க பிரதிநிதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அமைச்சருக்கு எதிராக, மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். பின்னர் வேளாண் சட்ட நகல்களைக் கிழித்தெறிந்து அவர்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வேளாண் சட்டங்களில் எதிர்த்த 21 நாட்களாக பஞ்சாபில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. அத்துடன் பஞ்சாப் ஹரியானாவில் வைக்கோலை எரிக்கும் போராட்டத்தால் டெல்லியில்  காற்று மாசு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த நேற்று விவசாய சங்கங்கள் முடிவு செய்தன. ஆனால் இன்று நடைபெற்ற கூட்டத்தில் துறை அமைச்சர் பங்கேற்காத நிலையில் பேச்சுவார்த்தை பாதியில் முடிந்தது. வேளாண்  சட்டத்திற்கு எதிரான போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கூறுகின்றனர்.

Categories

Tech |