Categories
தேசிய செய்திகள்

22 நாட்களாக… கோழிப்பண்ணையில் சிறை… 17 வயது சிறுமிக்கு… நடந்த கொடூர சம்பவ

ஒடிசாவில் 17 வயது சிறுமியை கோழி பண்ணை ஒன்றில் 22 நாட்களாக அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலத்தில் ஜகத்சிங்பூர் மாவட்டத்தில் உள்ள தீர்டோலை என்ற பகுதியில் வசித்து வரும் 17 வயது சிறுமி ஒருவர் கடந்த மாதம் தனது பெற்றோருடன் சண்டையிட்டுக் கொண்டு வீட்டை விட்டு கட்டாக் என்ற பகுதிக்கு சென்று விட்டார். அதன்பிறகு கட்டாக்கில் இருந்து வீடு திரும்ப முடிவு செய்த அந்த சிறுமி, ஓஎம்சி சதுக்கத்தில் பேருந்து ஏறுவதற்காக காத்திருந்துள்ளார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர், தான் வீட்டில் விடுவதாக கூறி அந்த சிறுமியை அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் அவர் அங்கு செல்லாமல் கதிரவுட்பட்னா என்ற கிராமத்தில் உள்ள ஒரு கோழிப்பண்ணைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அந்த சிறுமியைப் 22 நாட்கள் ஒரே அறையில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

அந்தப் பண்ணையில் வேலை செய்யும் இரண்டு ஆட்கள் மீண்டும் மீண்டும் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பண்ணையில் சட்டவிரோதமான செயல்கள் நடப்பதாக உள்ளூர்வாசிகள் சிலர் போலீசுக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், பண்ணையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறுமியை பாதுகாப்பாக மீட்டனர். மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தப்பியோடிய மற்றொருவரை தேடி வருகின்றனர். அந்த சிறுமியை மீட்ட போலீசார், மாவட்ட குழந்தைகள் நல குழு முன் ஆஜர்படுத்தி, அதன்பிறகு அனாதை இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது.

Categories

Tech |