தற்போதைய காலத்தில் ஏராளமான காணொளிகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது. அதிலும் பாகுபாடில்லாமல் விலங்குகள் செய்யும் சேட்டையும் மனிதர்கள் செய்யும் சேட்டையும் ஒருசேர பரவி வருகின்றது. அவ்வகையில் தற்போது காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. அந்த காணொளியில் தெரு ஓரமாக மாடு ஒன்று அமைதியாக நிற்கின்றது. அங்கு வந்த முதியவர் ஒருவர் குச்சி வைத்து மாட்டை அடிக்கிறார்.
அடுத்ததாக கோபம் கொண்ட அந்த மாடு முதியவரை முட்டித் தள்ளிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்து செல்கிறது. இந்த காணொளி சமூக வலைத்தளத்தில் பரவ பலரும் இதற்கு பெயர் தான் கர்மா என்றும் வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்றும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதோடு வாயில்லா ஜீவனை அடித்ததாக முதியவருக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
म्हाताऱ्याच्या अंगात लय किडे… 😂😂😂😂उगाच खोड काढायची काय गरज होती का? pic.twitter.com/wZMeRT6RIG
— किरण… (@Coolkiranj) October 8, 2020