Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மாற்றுத் திறனாளிகளை அவமதித்த குஷ்பு… ஆத்திரமடைந்த மாற்றுத்திறனாளிகள்… போலீசில் புகார்…!!!

மாற்றுத்திறனாளிகளை அவமதிக்க கூடிய வகையில் நடிகை குஷ்பு பேசியதாக கூறி மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக இருந்த நடிகை குஷ்பு, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தற்போது பாஜகவில் இணைந்துள்ளார். டெல்லி சென்று பாஜகவில் இணைந்த பிறகு சென்னை திரும்பிய அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “காங்கிரஸ் கட்சியில் நான் ஆறு ஆண்டுகளாக இருந்துள்ளேன். ஆனால் அவர்கள் தனக்கு எந்த மரியாதையும் தரவில்லை. காங்கிரஸ் கட்சியில் ஒரு மூளை வளர்ச்சி இல்லாத கட்சி”என்று தெரிவித்துள்ளார். அவரின் கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் கடுமையாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் வகையில் நடிகை குஷ்பு பேசியதாக கூறி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான மதுரை மாவட்ட தலைவர் நாகராஜன் தலைமையில் காவல் நிலையத்தில் இன்று புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.அதனைப்போலவே திண்டுக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் அமைப்பு சார்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே நடிகை குஷ்பு தெரிவித்த கருத்து பற்றி வருத்தம் தெரிவித்துள்ளார்.

 

Categories

Tech |