கேப்ஸிகம் உருளைக்கிழங்கு சாதம் செய்ய தேவையான பொருட்கள்:
அரிசி – 2 கப்
உருளைக்கிழங்கு – 4
குடைமிளகாய் – ஒன்று
தக்காளி – 4
பெரிய வெங்காயம் – 1
பட்டாணி – அரை கப்
இஞ்சி, பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 3
பட்டை – சிறிது
ஏலக்காய் – சிறிது
சீரகம் – 2 தேக்கரண்டி
கிராம்பு – சிறிது
கொத்தமல்லி – சிறிது
புதினா – சிறிது
மஞ்சள்தூள் – அரை தேக்கரண்டி
கடலைப்பருப்பு – 4 தேக்கரண்டி
தேங்காய் பால் – 2 கப்
மிளகாய் பொடி – அரை தேக்கரண்டி
தனியா பொடி – அரை தேக்கரண்டி
நெய் – 2 தேக்கரண்டி
எண்ணெய் – 2 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் அரிசியை நன்றாக கழுவி கொள்ளவும். அதன்பின் தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் இவைகளைப் போட்டு சிவக்க வதக்கவும். அதனுடன் இஞ்சிப்பூண்டு விழுது சேர்த்து கிளறவும்.
பிறகு நறுக்கின பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும். அத்துடன் உருளைக்கிழங்கு தேங்காய் பால் ஊற்றி நன்றாக கிளறவும். பிறகு மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, தனியா பொடி மற்றும் உப்பு சேர்த்து கொள்ளவும்.
அதனுடன் 2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். அதன்மேல் சீரகத்தை தூவி, அரிசியை அதில் கொட்டி நன்றாக கிளறி விடவும். இறுதியில் புதினா, கொத்தமல்லி தலை, பாதி வேகும் போது எலுமிச்சை சாறு ஊற்றவும். இப்போது கேப்ஸிகம் உருளைக்கிழங்கு சாதம் தயார். அதனை தயிர் சட்னியுடன் பரிமாறுவது சிறந்தது.