Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுமா?… விளக்கமளித்த அமைச்சர்…!!!

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது பற்றி இப்போது முடிவு எடுக்க முடியாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் காட்பாடியில் நடந்த அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ” தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது பற்றி தற்போது எந்த ஒரு முடிவும் எடுக்க முடியாது.ஏனென்றால் ஆந்திராவில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் 26 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சில உயிர் பலிகளும் ஏற்பட்டுள்ளன.

அதனால் கொரோனா பாதிப்பு எப்போது குறைகிறதோ அப்போதுதான் பள்ளிகள் திறப்பது பற்றி முடிவு எடுக்க முடியும். இது பற்றி முறையான அறிவிப்பை முதல்-அமைச்சர் வெளியிடுவார். மேலும் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு சட்டம் ஒன்றை இயற்றி அதனை இந்த ஆண்டே செயல்படுத்துவதற்கு தமிழக அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது”என்று அவர் கூறியுள்ளார்.

 

Categories

Tech |