Categories
அரசியல் மாநில செய்திகள்

நீங்க அம்மா ஆட்சி என்றால்….. நாங்க கலைஞசர் ஆட்சி…. முக.ஸ்டாலின் நம்பிக்கை …!!

தமிழகத்தில் அடுத்து அமைய இருப்பது கலைஞரின் ஆட்சி என திமுக தலைவர் முக.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்ட திமுக சார்பில் நேற்று நடந்த நிகழ்ச்சி திமுக தலைவர் முக.ஸ்டாலின் காணொளி மூலம் கலந்து கொண்டார். அதில், அதிமுக சார்பில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வருகின்ற சட்டமன்ற தேர்தலின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை அடுத்து அவர் அறிக்கை  ஒன்றை வெளியீட்டு இருந்தார். 10 பாயிண்ட்களை உள்ளடக்கிய அந்த அறிக்கை குறித்து மு க ஸ்டாலின் நேற்றைய கூட்டத்தில் விமர்சித்தார்.

அதில் குறிப்பிட்டுள்ள பத்து பாயிண்ட்களையும் தனித்தனியே குறிப்பிட்ட ஸ்டாலின், திமுக ஆட்சி காலத்தில் செய்யப்பட்டது என்ன என்பது குறித்தும் ? அதிமுக ஆட்சிக்காலத்தில் செய்தது குறித்தும் விளக்கமாக விமர்சித்தார். அதை தொடர்ந்து பேசிய அவர் ஸ்டாலின் பேசும் போது, ஒரே ஒரு அறிக்கையில் 10 பொய்களை சொல்லி இருக்கிறார். அப்படி என்றால் அவர் நித்தமும் சொல்லக்கூடிய பொய்களை கூட்டினால் நூற்றுக்கணக்கில் இருக்கும். அந்தப் பொய்களை எல்லாம் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

இந்தப் பொய் ஆட்சிக்கு, பொல்லாத ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழ்நாட்டு மக்கள் தயாராகி விட்டார்கள். அடுத்த அமைய இருப்பது திமுக ஆட்சி. அடுத்து அமைய இருப்பது அண்ணாவின் ஆட்சி. அடுத்து அமைய இருப்பது நமது முத்தமிழ் கலைஞரின் ஆட்சி. சாதாரண, சாமானிய, ஏழை நடுத்தர வர்க்கத்தின் அவருடைய கண்ணீரை துடைக்கக் கூடிய ஆட்சியாக இந்த ஆட்சி அமையும். என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன் என ஸ்டாலின் முடித்துக்கொண்டார்.

Categories

Tech |