Categories
அரசியல் மாநில செய்திகள்

3 கொள்கை வச்சு இருக்காங்க… அப்பறம் எப்படி வருவாங்க ? விளாசிய முக ஸ்டாலின் …!!

கமிஷன், கலெக்சன், கரப்ஷன் இந்த மூன்றையும் மட்டுமே கொள்கையாக அதிமுக  வைத்துள்ளது என திமுக தலைவர் முக.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

திமுக கோவை மாவட்டம் சார்பில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் காணொளி மூலமாக பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின், இன்றைக்கு ஆட்சியில்  இருக்குறவங்களுக்கு மக்களைப் பற்றி எந்த கவலையும் இல்லை, எந்த அக்கறையும் கிடையாது. அவர்கள் போடக்கூடிய திட்டங்கள் எல்லாம் அரசாங்க கஜானாவை,  அவர்கள் வீட்டு கஜானாவுக்கு எடுத்துட்டு போக தான் திட்டங்களை போடுறாங்க. அதனால தான் அதிமுக ஆட்சியில் தொழில் வளர்ச்சி இல்லை, தொழிலாளர் மலர்ச்சியும் இல்லை. சிறு குறு தொழில்கள் அனைத்தும் நசுங்கி போச்சு.

தொழில் வளர்ச்சி  எப்போது ஏற்படும் என்று கேட்டீங்கன்னா… அந்த மாநில அரசு முதலில் வலிமையானதாக இருக்கணும். அதுமட்டுமில்லை குழப்பமில்லாததாக  இருக்கணும். தொலைநோக்கு பார்வை கொண்டதாக இருக்கணும். இது எல்லாத்தையும்விட முதலமைச்சராக இருக்க கூடியவர் மக்களுடைய நம்பிக்கையை பெற்றவராக இருக்கணும். ஒரு தலைமைக்கு கட்டுப்பட்டதாக இருக்கணும்.  இந்த மாதிரி எந்த இலக்கணம் இல்லாத ஆட்சி தான் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி.

கடந்த 4 ஆண்டுகாலமாக உட்கட்சி குழப்பத்திலேயே இருக்கிற ஆட்சியை நம்பி யாரும் முதலீடு செய்ய வரவே மாட்டாங்கள். அதிமுக ஆட்சியில் 2 முதலீட்டாளர் மாநாடு நடத்தி இருக்கிறார்கள். இந்த ரெண்டு மாநாடுகள் மூலமாக எவ்வளவு முதலீடு வந்துச்சுன்னு கேட்டேன்,  இதுவரை தகவல் இல்லை. அவங்களால தகவல் தர முடியாது. முதலீடு வந்தால் தான் சொல்ல முடியும். முதலமைச்சர் வெளிநாடுகளுக்கு போனார், துணை முதலமைச்சரும் வெளிநாடுக்கு போனாரு.

அமைச்சர்கள் எல்லாம் வெளிநாடு போனாங்க. எங்கிருந்து எவ்வளவு முதலீட்டை கொண்டு வந்தாங்க ? முதலீடு எதுவும் வந்ததாக தெரியவில்லை.  அவர்களை பொறுத்த வரைக்கும்  கமிஷன், கலெக்சன், கரப்ஷன் இந்த மூன்றையும் மட்டுமே கொள்கையாக வச்சிருக்கிற அதிமுக ஆட்சியை நம்பி யாரும் முதலீடு செய்ய மாட்டாங்க, இதுதான் உண்மை.

Categories

Tech |