Categories
அரசியல் மாநில செய்திகள்

கவலையில்லை…. அக்கறையில்லை….. வீட்டு கஜானாவுக்கு போகுது…. வச்சு செய்த முக.ஸ்டாலின் …!!

அரசு கஜானா அவர்களின் வீட்டு கஜானாவுக்கு செல்கின்றது என முக.ஸ்டாலின் அதிமுக  அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

நேற்று கோவையில் நடந்த திமுக நிகழ்ச்சியில் இணையம் மூலமாக கலந்து கொண்டு பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின், இன்றைக்கு ஆட்சியில்  இருக்குறவங்களுக்கு மக்களைப் பற்றி எந்த கவலையும் இல்லை, எந்த அக்கறையும் கிடையாது. அவர்கள் போடக்கூடிய திட்டங்கள் எல்லாம் அரசாங்க கஜானாவை,  அவர்கள் வீட்டு கஜானாவுக்கு எடுத்துட்டு போக தான் திட்டங்களை போடுறாங்க. அதனால தான் அதிமுக ஆட்சியில் தொழில் வளர்ச்சி இல்லை, தொழிலாளர் மலர்ச்சியும் இல்லை. சிறு குறு தொழில்கள் அனைத்தும் நசுங்கி போச்சு.

பெரிய முதலீடுகளை தான் ஈர்க்க முடியல, இருக்கிற சிறு குறு தொழிலையாவது காப்பாற்ற பழனிச்சாமி ஆட்சியில் முடிந்ததா ? என்றால் அதுவும் இல்லை.  தமிழ்நாட்டில் சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் அதிகமாக இருக்கக்கூடிய மாவட்டம் கோவை மாவட்டம் தான். நெசவாளர்களும் அதிகம், நெசவுத் தொழிலும் அதிகம், நெசவு கூட்டுறவு சங்கங்களும் அதிகம் இருக்கு.பின்னலாடை தொழில், மோட்டார் உதிரிப் பாகங்கள் தயாரிக்கிற ஏராளமான தொழில்களை கொண்ட மாவட்டம் இந்த மாவட்டம்.

இந்தத் தொழில்கள் எல்லாமே இப்போ சிறப்பா நடந்துகிட்டு இருக்கு என்று சொல்ல முடியுமா? இந்த தொழில்களை செய்யக்கூடிய தொழிலாளர்கள் நிம்மதியாக இருக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா? கோவை மாவட்டத்தில் இருந்த ஒன்றரை லட்சம் சிறு குறு நிறுவனங்களில் 15,000 நிறுவனங்கள் மொத்தமாக முடங்கிப் போனதா அந்த நிறுவனங்கள் தொடர்பான சங்கத்தினர் தெளிவாக சொல்லிக்கிட்டு இருக்காங்க.

பம்பு மோட்டார் தயாரிக்க கூடிய தொழில் முடங்கி போச்சு, மொத்தமா பாதிக்கப்பட்டு இருக்கக் கூடிய சிறு குறு தொழில் நிறுவனங்கள் அழைத்து இந்த அரசாங்கம் இதுவரை பேச்சுவார்த்தை நடத்தி இதுக்கா? இந்த சங்கத்து கிட்ட ஏதாவது கருத்து கேட்டு இருக்கா? உங்களுடைய தேவைகள் என்னங்கறது பேச்சுக்காவது சந்தித்துக் கேட்டு இருக்காங்களா இந்த அரசு? என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

Categories

Tech |