நாளைய பஞ்சாங்கம்
16-10-2020, புரட்டாசி 30, வெள்ளிக்கிழமை, அமாவாசை திதி பின்இரவு 01.01 வரை பின்பு வளர்பிறை பிரதமை.
அஸ்தம் நட்சத்திரம் பகல் 02.57 வரை பின்பு சித்திரை.
அமிர்தயோகம் பகல் 02.57 வரை பின்பு சித்தயோகம்.
நேத்திரம் – 0.
ஜீவன் – 0.
சர்வ அமாவாசை.
இராகு காலம் – பகல் 10.30-12.00,
எம கண்டம்- மதியம் 03.00-04.30,
குளிகன் காலை 07.30 -09.00,
சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00
நாளைய ராசிப்பலன் – 16.10.2020
மேஷம்
உங்களின் ராசிக்கு ஆடம்பரப் பொருட்களை வாங்கும் ஆர்வம் கூடும். உற்றார் உறவினர்களால் சந்தோஷம் பெருகும். அரசு ரீதியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். புதிய முயற்சிகள் செய்வதனால் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தொழிலில் எதிரி தொல்லை விலகும்.
ரிஷபம்
உங்களின் ராசிக்கு வீட்டில் தனவரவு இருக்கும். புத்திர வழியில் நல்ல செய்தி உண்டாகும். வெளியில் இருந்து வரவேண்டிய தொகை கைக்கு வரும். சுபகாரியங்கள் கைகூடும். மேற்படிப்பிற்காக வெளியூர் செல்லும் வாய்ப்பு உண்டாகும். நினைத்த காரியம் நிறைவேறும்.
மிதுனம்
உங்களின் ராசிக்கு வீட்டில் பெரியவர்களிடம் மாற்று கருத்து உண்டாகும். குழந்தைகளின் படிப்பில் கவனம் குறையும். அரசு ரீதியில் தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த சலுகை கிடைக்க சற்று காலதாமதம் உண்டாகும். வெளியூர் பயணங்களால் சாதகமான பலன் கிடைக்கப் பெறும்.
கடகம்
உங்களின் ராசிக்கு வீட்டில் ஒற்றுமை நிலவும். பொருளாதாரம் சிறப்பாக இருப்பதால் தேவை அனைத்தும் பூர்த்தியாகும். பொன் பொருள் சேர வாய்ப்பு உண்டு. புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால் உண்டாகும். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். உடன்பிறந்தவர்களின் உதவி கிடைக்கும்.
சிம்மம்
உங்களின் ராசிக்கு உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். உத்யோகத்தில் எதிர்பாராத செலவுகள் உண்டாகும்.தொழிலில் அதிகாரிகளால் வேலைப்பளு இருக்கும். நண்பர்கள் மூலம் வீண் பிரச்சனை சந்திக்கக்கூடும். வீட்டில் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும்.
கன்னி
உங்களின் ராசிக்கு தொழில் செய்பவர்கள் தொழிலில் உற்சாகத்துடன் இருப்பார்கள். குழந்தைகள் பெற்றவரின் நிம்மதியை பெறுவார்கள். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். கடன் தொல்லை தீரும். சொத்து விஷயங்களில் வெற்றி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
துலாம்
உங்களின் ராசிக்கு பொருளாதார ரீதியில் நெருக்கடி இருக்கும். வீட்டில் செலவு உண்டாகும். வியாபார ரீதியில் மேற்கொள்ளும் பயணம் அனுகூலத்தை கொடுக்கும். உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள். தொழிலில் இருந்த பிரச்சனை விலகும்.
விருச்சிகம்
உங்கள் ராசிக்கு காலையிலே மன மகிழ்ச்சியான செய்தி வீடு வந்து சேரும்.பிரச்சினைகளைத் தீர்க்க உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். சுபகாரியங்களில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபாரத்தில் சிறப்பு அடைவீர். வருமானம் இரட்டிப்பாகும்.
தனுசு
உங்களின் ராசிக்கு குழந்தைகள் படிப்பில் கவனமாக இருப்பார்கள். புதிய தொழிலை தொடங்க நண்பர்கள் உறுதுணை கிடைக்கும். வீட்டில் சுப செலவு இருக்கும். தொழிலில் வேலைப்பளு நீங்கும். தெய்வ வழிபாடு இருக்கும். புதிய பொருட்களை வாங்கும் ஆர்வம் கூடும்.
மகரம்
உங்களின் ராசிக்கு தொழில் ரீதியில் வெளியூர் பயணம் அலைச்சலை கொடுக்கும். சுறுசுறுப்பு இல்லாமல் இருப்பீர்கள். முன்கோபத்தால் தொழிலில் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரும். விட்டுக்கொடுத்து செல்வது நல்லதைக் கொடுக்கும். நண்பர்களால் எதிர்பார்த்த உதவி அனைத்தும் கிடைக்கும்.
கும்பம்
உங்களின் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த வேலை செய்தாலும் தடை ஏற்படும். உடல் நிலையில் சிறு பாதிப்பு உண்டாகும். தொழிலில் கொடுக்கல்-வாங்கலில் நிதானமாக செயல்படுவதே நல்லது.புதிய முயற்சி எடுப்பதையும் வெளிப் பயணம் செல்வதையும் தவிர்த்து விடுங்கள்.
மீனம்
உங்களின் ராசிக்கு வீட்டில் இருந்த பிரச்சனை நீங்கி ஒற்றுமை கூடும். பெண்கள் வீட்டு தேவையை பூர்த்தி செய்வார்கள். வீட்டில் அனைவருடனும் வெளி பயணம் செல்வீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியைக் கொடுக்கும். கடன் தொல்லை தீரும்.