மருத்துவ மேற்படிப்புகளில் ஓபிசி மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க முடியாது என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
ஓபிசி மாணவர்களுக்கு மருத்துவ மேற்படிப்பு களில் இந்த வருடம் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தமிழக அரசு, திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தன. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், ஓபிசி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இந்த வருடம் 50 சதவீத இட ஒதுக்கீடு கட்டாயம் வழங்க முடியாது என்று மத்திய அரசு கூறியுள்ளது. மேலும் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த அதற்கு மேலும் கால அவகாசம் தேவைப்படுவதாக தெரிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி நீட் தேர்வு முடிவுகள் நாளை வெளியாக இருப்பதால் தற்போது இட ஒதுக்கீடு வழங்குவது குழப்பத்தை ஏற்படுத்தும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. மத்திய அரசு வெளியிட்டுள்ள இந்த முடிவை மனுதாரர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதில் நீதிமன்றம் பிறப்பு இருக்கக்கூடிய உத்தரவைத் தொடர்ந்து மனுதாரர்கள் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.