ரிஷபம் ராசி அன்பர்களே..!
தொழில் புரிபவர்களுக்கு இன்று பணச்செலவுகள் தடுக்க முடியாததாக அமையும். நேர்வழியில் பணம் செலவு செய்வதால் நிம்மதி பிறக்கும். சினத்தை குறைத்தால் சிக்கல்கள் தீரும்.
குடும்பத்திலிருந்துவந்த பிரச்சனைகள் சரியாகும். கணவன் மனைவிக்கிடையே இருந்துவந்த குழப்பங்கள் நீங்கும். பிள்ளைகள் கல்வியில் அக்கறை காண்பீர்கள். மாணவ மாணவியர்களுக்கு இன்று கல்வியில் முன்னேற்றம் காணப்படுகிறது. நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். பணத்தேவைகள் பூர்த்தியாகும். மாலை நேரங்களில் நடைப்பயிற்சி மேற்கொண்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். ஆரோக்கியம் இன்று சிறந்த காணப்படுகிறது. காதலர்களுக்கும் இன்று முன்னேற்றம் தரும் வகையில் அனைத்து வகையான சூழலும் அமையும். அம்மன் வழிபாடு மனதிற்கு நிம்மதியையும், காரியத்தில் வெற்றியையும் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 4.
அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு நிறம்.