மிதுனம் ராசி அன்பர்களே..!
நல்ல தகவல்கலால் புதிய உற்சாகம் பிறக்கும். மனைவியின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியளிக்கும். நண்பர்கள் உதவிக்கிடைக்கும். புதிய வாய்ப்புகள் ஏற்படும். தொழில் வியாபாரம் சீராக நடக்கும்.
பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். சக பணியாளர்களின் ஒத்துழைப்பால் பணிகளை எளிதில் முடிப்பீர்கள். உணவுகளில் கவனம் கொள்ளுங்கள். விலையுயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது எச்சரிக்கை தேவை. வசீகரமான தோற்றம் இன்று வெளிப்படும். காதலில் வயப்படக்கூடிய சூழலும் ஏற்படுகிறது. மாணவக் கண்மணிகளுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மேற்கல்விக்கான முயற்சிகளில் வெற்றி வாய்ப்புகள் வந்துச்சேரும். இன்று எதை செய்தாலும் வெற்றிகரமாக இருக்கும், இருந்தாலும் இறை வழிபாட்டுடன் எதையும் செய்யுங்கள் நல்ல முன்னேற்றத்தை பெற்றுக்கொள்ளலாம்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 4.
அதிர்ஷ்டமான நிறம்: பச்சை நிறம்.