கும்பம் ராசி அன்பர்களே..!
இன்று நீங்கள் பணவரவால் மனம் மகிழ்வீர்கள். இன்று நீங்கள் கவலைகளை மறந்து உள்ளத்தை உற்சாகமாக வைத்துக் கொள்வீர்கள். இன்று ஆதாயம் தரக்கூடிய விஷயங்களில் ஈடுபடுவீர்கள்.
வங்கிக்கடன் உதவிகள் தடையின்றி கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வெற்றிகள் ஏற்படும். நிதி நிலைமை சீராக இருக்கும். இன்று உங்களுக்கு சிரமங்கள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு குறைந்து காணப்படுவீர்கள். எதிர்பார்த்த இடத்திற்கு மாற்றம் கிடைக்கலாம். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் சொல்படி நடப்பது நல்லது. வீண் வாக்குவாதங்களை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். யாரைப் பற்றியும் விமர்சனம் செய்யவேண்டாம்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 7.
அதிர்ஷ்டமான நிறம்: பச்சை நிறம்.