பனி வரகு காளான் சாதம் செய்ய தேவையான பொருட்கள்:
பனிவரகு அரிசி – 1 கப்
நறுக்கிய காளான் – 1/2 கப்
கடலை எண்ணெய் -3 மேஜைக்கரண்டி
ஏலக்காய் -2
பட்டை – சிறிது
கிராம்பு – 2
பட்டை சோம்பு (பொடித்தது) – 2 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது -1 மேசைக்கரண்டி
மிளகாய் தூள் -1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – சிறிது
வெங்காயம் – கால் கப்
தக்காளி – கால் கப்
புதினா – ஒரு கைப்பிடி
தேங்காய் பால் – கால் கப்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் அதில் பட்டை, ஏலக்காய், 2 கிராம்பு, சோம்பு, இஞ்சிப்பூண்டு விழுது முறையே சேர்த்து நன்றாக வதக்கவும்.
மேலும் அதனுடன் புதினா, வெங்காயம், தக்காளி, மஞ்சள்தூள் சிறிதளவு, மிளகாய்த்தூள் 1 தேக்கரண்டி சேர்த்து நன்றாக வதக்கவும்.
கடாயில் கழுவிய காளான் 1/2 கப், கல்லில்லாத பனி வரகு அரிசி1 கப், தண்ணீர் 2 கப், சிரிதளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.தண்ணீரும், அரிசியும் ஒரே மட்டத்திற்கு வரும்போது, தேங்காய் பால் சேர்த்து மிதமான தீயில் 10 நிமிடம் வைக்கவும்.
10 நிமிடம் கழித்து திறந்து பார்த்தால் புதுவிதமான சுவையில் பணி வரகு காளான் சாதம் ரெடி.