டெல்லியில் இன்று நடந்த தேர்வு ஒன்றில் தேர்வு எழுத வேண்டிய மாணவருக்கு பதிலாக ஆள்மாறாட்டம் செய்த மாணவரை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.
டெல்லியில் மிகவும் புகழ்பெற்ற ஜாமியா பல்கலைகழகத்தில் நுழைவுத்தேர்வு ஒன்று இன்று நடந்துள்ளது. அதில் இளைஞர் ஒருவர் தேர்வு எழுதியுள்ளார். சந்தேகத்திற்குரிய வகையில் இருந்த அவரை பிடித்து விசாரணை செய்ததில் அந்த மாணவர் ஆள் மாற்றம் செய்துள்ளது தெரியவந்துள்ளது. அந்த மாணவரும், தேர்வு எழுத வேண்டிய மாணவரும் ஒரு பயிற்சி மையத்தில் ஒன்றாக சேர்ந்து பயின்று உள்ளனர். தற்போது பிடிபட்டுள்ள அந்த மாணவரிடம் அந்த மையத்தின் உரிமையாளர் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதும் படி கூறியுள்ளார்.
அவ்வாறு செய்தால் மாணவரின் பயிற்சி கட்டணம் தள்ளுபடி செய்யப்படுவதாகவும் அவர் உறுதி அளித்துள்ளார். அதனால் இந்த விவகாரத்தில் தொடர்புடைய பயிற்சி மைய உரிமையாளர் மற்றும் தேர்வு எழுத வேண்டிய மாணவர் ஆகிய இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.