நாட்டுக்காய் சாதம் செய்ய தேவையான பொருட்கள்:
கத்தரிக்காய் – 2
அவரைக்காய் – 50 கிராம்
பீன்ஸ் – 50 கிராம்
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
மிளகுப்பொடி – 1 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய இஞ்சி – 1 டீஸ்பூன்
பெருங்காயம் – ஒரு சிட்டிகை
நல்லெண்ணெய் – 3 டீஸ்பூன்
சுக்கு பவுடர் – 1/2 டீஸ்பூன்
வறுத்த உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை, உப்பு – தேவையான அளவு
சாதம் – 3 கப்
செய்முறை:
கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் பெருங்காயம், கருவேப்பிலை போட்டு தாளிக்கவும். பின்னர் அதனுடன் இஞ்சி, கத்தரிக்காய் ,அவரைக்காய் ,பீன்ஸ் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும் .
வதங்கியவுடன் அதில் மஞ்சள் தூள் கால் டிஸ்பூன், மிளகாய் தூள் 1 டிஸ்பூன் சேர்த்து வதக்கி தேவையானஅளவு உப்பு போட்டு சிறிது தண்ணீர் விட்டு காய்களை நன்கு வேக விடவும்.
தண்ணீர் வற்றியதும் அதனுடன் 3 கப் சாதம், சுக்கு பவுடர், உளுந்தம்பருப்பு பொடியை சேர்த்து நன்கு கிளறி விடவும.
இறுதியில், மசாலாவின் பச்சை வாசனை போனதும் இறக்கி ஊறுகாயுடன் பரிமாறலாம். இப்போது சுவையான நாட்டுக் காய் சாதம் ரெடி.