Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

லஞ்சம் பெற்ற நகராட்சி பொறியாளர்…!!

புதுச்சேரியில் லஞ்சம் வாங்கிய நகராட்சி பொறியாளரை சிபிஐ அதிகாரிகள் கையும் களவுமாக கைது செய்தனர்.

புதுச்சேரி அடுத்த தேங்காய் தட்டு பகுதியை சேர்ந்தவர் இளந்திரையன். இவர் தேங்காய் தட்டு பகுதியில் வீடு கட்டி வருகிறார். இதற்காக மணல், ஜல்லி, கற்களை வீட்டிற்கு முன் கொட்டி இருந்தார். வீதியில் கொட்டியதற்கு   நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியதாக தெரிகிறது. இது குறித்து புதுச்சேரி நகராட்சி இளநிலை பொறியாளர் கிருஷ்ணமூர்த்தியை இளந்திரையினர்  அணுகியபோது  அவர் 5ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து சென்னை சிபிஐ அதிகாரிகளுக்கு இளந்திரையன் புகார் தெரிவித்தார்.

இதன் பேரில் சிபிஐ அதிகாரிகள் புதுச்சேரி வந்தனர். இளந்திரையினை சந்தித்து பேசிய அதிகாரிகள் ரசாயனம் தடவிய பணத்தை கொடுத்தனர். பின்னர் புதுச்சேரி கம்பன் கலையரங்கத்தில் உள்ள அலுவலகத்தின் வாகன நிறுத்துமிடத்தில் வைத்து இளந்திரையன் இடம் கிருஷ்ணமூர்த்தி லஞ்சம் பணத்தை பெற்றார். உடனே அங்கு மறைந்திருந்த சிபிஐ அதிகாரிகள் கிருஷ்ணமூர்த்தியை கையும், களவுமாக கைது செய்தனர். மேலும் நகராட்சி அலுவலகத்திலும் சோதனை நடத்தினர்.

Categories

Tech |