சாமை மல்லி சாதம் செய்ய தேவையான பொருள்கள்:
சாமை அரிசி – 2 கப்
நல்லெண்ணெய் – 2 மேஜைக்கரண்டி
ஏலக்காய் – 2
பட்டை – சிறிது
கொத்தமல்லி – ஒரு கட்டு
புதினா – 3 கொத்து
மிளகாய் – 3
இஞ்சி – சிறிது
பூண்டு – 10 பல்
உப்பு – தேவையானஅளவு
செய்முறை:
மிக்ஸி ஜாரை எடுத்து அதில் கொத்தமல்லி இலை 1 கட்டு, புதினா 3 கொத்து, 3 மிளகாய், இஞ்சி, பூண்டு 10 பல் ஆகியவற்றை ஒன்றாக போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து அதில் 2 கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் ஏலக்காய், பட்டை சேர்த்து தாளித்து அதனுடன் அரைத்த விழுதையும் சேர்த்து நன்கு வதக்கவும்.
அதனை தொடர்ந்து நன்கு கழுவி நீரை வடித்து வைத்த சாமை அரிசியை சேர்த்து, 4 கப் நீர் ஊற்றி நன்கு வேக விட்டு இறக்கினால் சாமை மல்லி சாதம் தயார்.