தமிழகத்தில் கிசான் திட்ட முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் அதிரடி விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
கிசான் திட்ட முறைகேடு தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த விசாரணையின் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கிறார்கள். பல தகுதியற்றவர்கள் விவசாயிகள் என்ற போர்வையில் அரசு அதிகாரிகள் மாற்றும் அவுட்சோர்சிங் மூலம் சட்டவிரோத பதிவு செய்துகொண்டு பயனடைந்துள்ளனர் என்ற புகார்கள் பெறப்பட்டு, அந்த புகாரின் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் இதுவரை 13 குற்ற வழக்கு பதிவு செய்துளர்கள்.
மாவட்டம் வாரியாக இந்த கைது நடவடிக்கை நடைபெற்று வருகின்றது. இந்த முறைகேடு தொடர்பாக இதுவரை தமிழகத்தில் 107 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிபிசிஐடி போலீசார் தரப்பில் தெரிவிக்கின்றன . இதுவரை இதுவரை 105 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது என்று குறிப்பிட்டுள்ள சிபிசிஐடி போலீசார் இந்த முறைகேட்டுக்கு உடந்தையாக இருந்ததாகவும், அதேபோல முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் 100 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்கள்.
தமிழகத்தில் 110 கோடிக்கு நடந்த இந்த முறைகேடு வழக்கை சிபிசிஐடி சார்பில் அந்தந்த மாவட்ட சிபிசிஐடி டிஎஸ்பி தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அவர்களே கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.