அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்கள், இணை ஒருங்கிணைப்பாளர் கூட்டாக கட்சியின் நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் மடல் ஒன்றை எழுதி இருக்கிறார்கள்.
அந்த மடலில் அவர்கள் குறிப்பிட்டிருப்பது, இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கழித்தும் மக்கள் சேவையாற்றக்கூடிய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற மிகப்பெரிய இயக்கம் அடுத்த ஆண்டு பொன்விழா காண இருப்பதாகவும், ஆற்றக்கூடிய பணிகள் அனைத்தும் அதிமுகவின் அடுத்த ஆண்டு வரும் அதிமுக பொன் விழா கொண்டாட்டத்திற்கு முன்னோட்டமாக உணர வேண்டும் என்று கூட்டாக அறிக்கை மூலம் குறிப்பிட்டுள்ளார்கள்.
இந்த இயக்கம் எதற்கு தொடங்கப் பட்டது என்பதையும் அவர்கள் இந்த மடல் மூலமாக சுட்டிக்காட்டி இருக்கிறார். குறிப்பாக தமிழ்நாட்டு மக்களுக்கு பேரறிஞர் அண்ணா முதல் அதிமுக நிறுவனத் தலைவராக இருக்கக் கூடிய எம்ஜிஆர் வரை ஆற்றிய தொண்டுகள் யாவை என்பதை அனைவரும் நினைவு கூற வேண்டும் என்றும், அதே போல வரலாற்று பக்கங்களை திருப்பி பார்க்க வேண்டும் என்றும், பெரியார் மற்றும் அவருடைய பயிற்சி பெற்ற பேரறிஞர் அண்ணா ஆகியோர் தமிழர்களுக்கு இன உணர்வை ஊட்டினார் என்றும், தமிழ்மொழியின் பெருமையை நினைவூட்டினார் குறிப்பிட்டுள்ளார்கள்.
சுதந்திரம் பெற்ற இந்திய நாட்டின் பயணத்தில் இனத்தாலும், மொழியாலும் ஒன்றுபட்ட தமிழர்களுடைய முன்னேற்றத்திற்கு, முன்னேற்ற பாதையில் செல்லக் கூடிய வகையில் வகையில் பயணித்தார்கள் என்றும் இந்த மடலில் குறிப்பிட்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் பேரறிஞர் அண்ணாவின் மறைவிற்குப் பிறகு அமைந்த அரசும், உருவான புதிய கட்சி தலைமையும் திராவிட இயக்கத்தினுடைய லட்சியங்களை மறந்து சுயநலனுக்காக அனைத்து அதிகாரங்களையும் பயன்படுத்திக்கொண்டு, தீய சக்திகள் என்னுடைய பிடியில் சிக்கி இருந்தன.
மக்கள் வெறுக்கக் கூடிய வகையில் அண்ணாவின் இயக்கம் செயல்படுவதாக வேதனையில் உச்சம் அடைந்து அதிமுகவின் நிறுவனத் தலைவர் எம்ஜிஆர் தன்னை இதயக்கனி என்று தாங்கிக் கொண்ட பேரறிஞர் அண்ணாவின் புகழையும், கொள்கையை நிலைநாட்ட 1972 ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதியன்று அதிமுக என்ற மிகப்பெரிய இயக்கத்தைத் தொடங்கினார் என்றும், அடுத்தடுத்து பல்வேறு வெற்றிகளை இதன் மூலம் பெற்றார் என்றும் இந்த மடலில் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
2021 அடுத்த ஆண்டு அனைவருக்கும் மிக முக்கியமான ஆண்டாக அமையப் போகிறது. மறைந்த தலைவர்கள் எம்ஜிஆர் மற்றும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் மிகப்பெரிய இரு பெரும் தலைவர்களை தாங்கி இருக்க உடன்பிறப்புகள் அனைவருமே 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கு அயராது உழைக்க வேண்டும் என்றும், அதிமுகவினுடைய பொன்விழாக் கொண்டாட்டத்தின் போது அதிமுக ஆட்சி கட்டிலில் அமர்ந்திருக்க வேண்டும் என்றும், அதற்கான வரலாற்று சாதனையை படைக்க அனைவரும் வரவேண்டும் இந்த மடல் மூலமாக OPS, EPS தெரிவித்துள்ளனர்.