Categories
மாநில செய்திகள்

லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்கு சமம் …!!

அரசு அதிகாரிகள் ஊதியத்தை தாண்டி லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்கு சமம் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் போதுமான நெல் கொள்முதல் நிலையங்கள் அமைத்தும் நெல் கொள்முதல் செய்ய தாமதமாவதால் விவசாயிகளுக்கு உரிய தங்கும் வசதி ஏற்படுத்தி உத்தரவிடக்கோரி சென்னை சேர்ந்த சூரிய பிரகாசம் என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்தரர். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் திரு. கிருபாகரன், திரு. புகழேந்தி ஆகியோர் கொண்ட அமர்வு உற்பத்தி செய்த பொருட்களை விற்க முடியாமல் ஒருபக்கம் இருக்க கூடிய சூழலில் இந்த பொருட்களை விற்பனை செய்ய அரசு அதிகாரிகள் மூட்டைக்கு 40 ரூபாய் லஞ்சம் பெறுவது வேதனையானது எனக் குறிப்பிட்டனர்.

ஊதியத்தை தாண்டி லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகள் பிச்சைக்காரர்களுக்கு சமமானவர்கள் என்றும் விவசாயிகளிடம் குறைந்த விலையில் கொள்முதல் செய்யும் தனியார் நிறுவனங்கள் அரசிடம் அதை அதிக விலைக்கு விற்று லாபம் பார்ப்பதாகவும் தெரிவித்தனர். விவசாயிகள் கொண்டுவரும் ஒரு நெல்மணி முளைத்து வீணாகபோனால் அதற்கு காரணமான கொள்முதல் நிலைய அதிகாரியிடம் பணத்தை வசூலிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் எத்தனை நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளன. விவசாயிகள் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வரும் நெல் மூட்டைகளை பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் கேள்வி எழுப்பினார். இந்த வழக்கில் நுகர்பொருள் வாணிப கழக இயக்குனரை தாமாக முன்வந்து எதிர் மனுதாரராக இணைத்துக் கொண்ட நீதிபதிகள் இது குறித்து இன்று உரிய விளக்கம் வழங்க உத்தரவிட்டு வழக்கை விசாரணையை முடித்து வைத்தனர்.

Categories

Tech |