Categories
சினிமா தமிழ் சினிமா

வந்துட்டியா என் மகளே…! கொரோனாவில் மீண்ட தமன்னா…! கட்டியணைத்து வரவேற்பு….!!

கொரோனாவில் தொற்றில் இருந்து மீண்ட தமன்னாவை, அவரின் பெற்றோர்கள்  கட்டியணைத்து வரவேற்றுள்ளனர்:

தமன்னா தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் பிரபலமான நடிகையாக மக்களின் மனம் கவர்ந்து   நடித்து வருகிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் தமன்னாவின் பெற்றோருக்கு கொரோனா இருப்பதாக தெரிய வந்தது. இதனால் தனக்கும்,எனது குடும்பத்தினருக்கும், பணியாளர்களுக்கும், தொற்றுயில்லை என்று தமன்னா தெரிவித்திருந்தார். ஏந்நிலையில் அவர் ஷூட்டிங்கிற்காக ஐதராபாத் சென்றபோது கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

அதனை தொடர்ந்து ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று, டிஸ்சார்ஜ் செய்தும் அங்கேயே தங்கி இருந்துள்ளார். உடல்நிலை குணமடைந்த உடன் மும்பையில் உள்ள அவரின் வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டுக்கு சென்ற தமன்னாவை. அவரின் அப்பா, அம்மா வாசலில் கட்டியணைத்து  வரவேற்றுள்ளன. தமன்னா தான் மீண்டும் வந்ததை உருக்கத்துடன் வீடியோவாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ இப்போது வைரலாகி வருகின்றது.

 

 

 

Categories

Tech |