Categories
அரசியல் மாநில செய்திகள்

மோடி சொல்லிட்டா கேட்குறாரு… வளைந்து கொடுக்குறாரு… வெளுத்து வாங்கிய உதயநிதி …!!

மோடி சொல்வதை கேட்குற ஆட்சி நடக்குது, வளைந்து கொடுக்குறாரு என உதயநிதி ஸ்டாலின் அதிமுக அரசை விமர்சித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சுரப்பாவை கண்டித்து திமுக இளைஞரணி – மாணவரணி நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின், இது எடப்பாடி ஆட்சி, மோடி என்ன சொன்னாலும் செய்வதற்கு ஒரு கேடுகெட்ட ஆட்சி, அடிமை ஆட்சி, எதற்கும் வளைந்து கொடுத்துக் கொண்டு இருக்கிறது. இதற்கு நாம் எதிர்ப்புக் குரல் கொடுக்க வேண்டும். இதற்க்கு ஆண்டுக்கு செலவு  300 கோடி, அது மத்திய அரசு 150, கோடி மாநில அரசு 150 கோடி கொடுக்கணும். அஞ்சு வருஷத்துக்கு 1500 கோடி. இந்த 1,500 கோடியை மத்திய அரசு கேட்கிறது. உங்களுக்கு இந்த சிறப்பு அந்தஸ்து கொடுக்கணும் என்றால் இந்த 1,500 கோடியை கொடுங்கள் என்று மத்திய அரசு சொல்கிறது.

அதற்க்கு சூரப்பா என்ன பண்ணனும், எங்ககிட்ட இந்த காசு இல்ல அப்படி என்ன சொல்லி இருக்கணும். இவர் என்ன சொன்னாரு ? அந்த ஆயிரத்து 500 கோடியை நாங்களே வசூலிக்கிறோம் என்று சொல்கிறார். 1500 கோடியை எப்படி வசூலிப்பார்கள் ? நம்முடைய படிக்கிற பிள்ளைகள் டியூஷன் ஃபீஸ். அதை உயர்த்தி அந்த 1,500 கோடியை வசூல் செய்வார்கள். இப்போ அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒவ்வொரு மாணவனும் இன்ஜினியரிங் முடிப்பதற்கு வெறும் நாலு வருஷம் வெறும் 2.30 லட்சம் ரூபா தான் ஆகுது. ஆனா இந்த சிறப்பு அந்தஸ்து கிடைத்தது என்றால் ஒவ்வொரு பையனும் படிக்கிறதுக்கு வருஷத்துக்கு 2.30 லட்ச ரூபா ஆகும். இதையெல்லாம் எதிர்த்து தான் நாம் இந்த போராட்டத்தை நடத்திக்கொண்டு இருக்கிறோம்.

ஏற்கனவே இந்த அண்ணா பல்கலைக்கழகத்தில் பல சிறப்பு உண்டு. நம்முடைய கலைஞர் அவர்கள் தமிழ்ல படிச்சு இன்ஜினியரிங் முடிப்பதற்கு திட்டத்தைக் கொண்டு வந்தார். நம்ம வீட்டு பசங்க இன்ஜினியரிங் படிக்க வேண்டும் என்ற நோக்கில் கொண்டு வந்தார். தமிழகத்திற்குள் எப்படி நீட் கொண்டு வந்து திணித்தார்கலோ அதே போல… விளக்கு கொடுப்போம், கொடுக்க மாட்டோம் என்று மாற்றி மாற்றி பேசி 13 பேரை கொன்று இருக்கிறார்கள் இந்த மோடி ஆட்சியும், எடப்பாடி ஆட்சியும். இன்ஸ்டிடியூட் ஆஃப் எமிடான்ஸ் இங்கேயும் கொண்டு வந்து அண்ணா பல்கலைக்கழகத்தை பிடித்தார்கள் என்றால் அதே நிலைமை தான் இங்கேயும் வரும்.

திருப்பி கோச்சிங் கிளாஸ் என்று நடத்துவாங்க. இதையெல்லாம் எதிர்த்து தான் இந்தப் போராட்டம் நடந்து கொண்டு இருக்கிறது. நான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன்,  இது முதல் போராட்டம். இது தொடர் போராட்டமாக தொடரும். இந்தத் திட்டத்தை நீங்கள் கைவிடவில்லை என்றால் நம் தலைவர் அறிவுறுத்தல் படிஇன்றைக்கு பல்கலைக்கழகத்திற்கு வெளியில் நடக்கும் போராட்டம் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உள்ளே நடக்கும். அதுவும் இளைஞரணி தலைவரோடு அனுமதி பெற்று நடத்துவோம். அத்தனை பேரும் அதற்கு ஒத்துழைப்பு கொடுப்பீர்கள். நாம் உறுதியாக இந்தப் போராட்டத்தைத் தொடர்வோம்.

Categories

Tech |