அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சுரப்பாவை கண்டித்து திமுக இளைஞரணி – மாணவரணி நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின், இது எடப்பாடி ஆட்சி, மோடி என்ன சொன்னாலும் செய்வதற்கு ஒரு கேடுகெட்ட ஆட்சி, அடிமை ஆட்சி, எதற்கும் வளைந்து கொடுத்துக் கொண்டு இருக்கிறது. இதற்கு நாம் எதிர்ப்புக் குரல் கொடுக்க வேண்டும்.
இதற்க்கு ஆண்டுக்கு செலவு 300 கோடி, அது மத்திய அரசு 150, கோடி மாநில அரசு 150 கோடி கொடுக்கணும். அஞ்சு வருஷத்துக்கு 1500 கோடி. இந்த 1,500 கோடியை மத்திய அரசு கேட்கிறது. உங்களுக்கு இந்த சிறப்பு அந்தஸ்து கொடுக்கணும் என்றால் இந்த 1,500 கோடியை கொடுங்கள் என்று மத்திய அரசு சொல்கிறது.
மாநில அரசு கொஞ்சம் கூட முதுகுஎலும்பு இல்லாத மோடி எதை சொன்னாலும் செய்கிற கூஜா தூக்கும் ஆட்சியாக உள்ளது.இன்னும் ஆறு மாசம் தான் இருக்கு. நம்முடைய ஒட்டுமொத்த தமிழக மக்கள் தயாராக இருக்காங்க. திமுகவை ஆட்சியில் உட்காரவைத்து. நம் தலைவர் அவர்களை முதலமைச்சர் ஆக உட்கார வைத்தார்கள் என்றால் விட்டுக் கொடுக்கப்பட்ட அத்தனை உரிமைகளையும் மீட்டெடுப்போம் என தெரிவிக்கின்றேன்.
தமிழ்நாடு முழுக்க இருபத்தி ஏழு இடங்களில் இளைஞரணி ஆர்ப்பாட்டத்தை நடத்தி இருக்கிறோம். எனவே இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நெகிழ்ச்சியோடு கலந்து கொண்ட அத்தனை பேருக்கும் நன்றி தெரிவித்து விடைபெறுகிறேன்.