சாமை சீரக சாதம் செய்ய தேவையான பொருள்கள்:
சாமை அரிசி -1 கப்
சீரகம் -1 மேசைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
நெய் – 2 மேசைக்கரண்டி
தயிர் – 2 தேக்கரண்டி
சீரகம் -1 மேசைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
நெய் – 2 மேசைக்கரண்டி
தயிர் – 2 தேக்கரண்டி
தண்ணீர் – 2கப்
செய்முறை:
சீரகத்தை எடுத்து தண்ணீர் விட்டு நன்றாக கழுவி, நீரை வடித்து நைசாக அரைத்து எடுத்து கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து 2 மேசைக்கரண்டி நெய் ஊற்றி சூடானதும், அதில் சாமை அரிசி1 கப் சேர்த்து லேசாக வறுத்து எடுக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து தண்ணீர் 2 கப், வறுத்த அரிசி சேர்த்து நன்கு வேக விடவும். தண்ணீர் நன்கு சுண்டியதும் அதனுடன் 2 தேக்கரண்டி தயிர், அரைத்து வைத்திருக்கும் சீரகம் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வேக வைத்து இறக்கவும்.
இப்போது மணமான மற்றும் சுவையான சாமை சீரக சாதம் தயார். இதனை தயிர் சம்பலுடன் அல்லது சட்னியுடன் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.