தன்னை தமிழினத்திற்கு எதிரான வன் என்பது போல சித்தரிப்பது வேதனை தருவதாக இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்திருக்கிறார்.
800 பட சர்ச்சை தொடர்பாக இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் விளக்கமளித்திருக்கிறார். இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்கை வரலாறு திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்தது. இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்தே பல தரப்பிலிருந்து எதிர்ப்புகளை பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
குறிப்பாக திரைத்துறையைச் சேர்ந்தவர்கள், அரசியல் தலைவர்கள், தமிழ் ஆர்வலர்கள் என்று பல்வேறு தரப்புகள் விஜய் சேதுபதிக்கு தங்களது அறிக்கைகளை, அறிவுரைகளை தொடர்ச்சியாகவே தெரிவித்த வண்ணம் உள்ளனர். இப்படியான ஒரு சூழலில் தன்னை தமிழினத்திற்கு எதிரானவர் போல் சித்தரிப்பது வேதனை அளிப்பதாக கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்திருக்கிறார்.