Categories
இந்திய சினிமா சினிமா

“800 “திரைப்பட சர்ச்சை – பிரபலங்கள் எதிர்ப்பு…!!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகும் 800 திரைப்படத்தில் நடிப்பதை தவிர்க்க வேண்டும் என திரைப் பிரபலங்கள் நடிகர் விஜய் சேதுபதிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நடிகர் விஜய் சேதுபதிக்கு இயக்குனர் திரு பாரதிராஜா எழுதியுள்ள கடிதத்தில் நம் ஈழத்தமிழ் பிள்ளைகள் செத்து விழுந்தபோது பிடில் வாசித்த முத்தையா முரளிதரனின் வாழ்வியல் படத்தில் நடிப்பதை தவிர்க்க முடியுமா பாருங்கள் என கோரிக்கை விடுத்துள்ளார்.

நடிகர் விவேக் கூறுகையில் மக்களால் விரும்பப்படுகிறவர்கள்  மக்கள் என்ன விரும்பியிருக்கிறார்கள்  என்பதையும் புரிந்து கொள்வார்கள் என தெரிவித்துள்ளார். இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதற்கு கவிஞர் தாமரை எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

Categories

Tech |