மேஷம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் ராசிக்கு எடுக்கும் முயற்சியில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். இன்று உங்களின் புத்திசாலித்தனம் காரணமாக பயனுள்ள பலன்கள் சாத்தியமாகும். இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாளாக இருக்கும்.
நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள். உங்களின் செயல்திறன் அசரவைக்கும். இன்று உங்களின் முயற்சிக்கு மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். இன்று உங்களின் துணையுடன் இனிமையான வார்த்தைகளை பகிர்ந்துக் கொள்வீர்கள். குடும்ப பிரச்சனைகளை கலந்து ஆலோசித்து சுமுகமான பலன்களைக் காண்பீர்கள். பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும். இன்று உங்களின் தேவைகளை பூர்த்தி செய்துக் கொள்வீர்கள். பணவரவு வாய்ப்புள்ளது. இன்று நீங்கள் ஆரோக்கியமாக இருப்பீர்கள். மாணவ மாணவியர்களுக்கு கல்வியில் ஆர்வம் குறைந்தே காணப்படும். பெற்றோர்கள் மற்றும் பிள்ளைகளின் மனமறிந்து செயல்படுவது நல்லது. இன்று நீங்கள் மகாலட்சுமி வழிபாடு செய்வது நல்லது.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 4.
அதிர்ஷ்டமான நிறம்: பிங்க் நிறம்.