செப்டம்பர் 13-ஆம் தேதி நடைபெற்ற மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டிருக்கின்றன.
இன்று மாலை 5.15 மணி அளவில் நீட் தேர்வு முடிவு வெளியாகியுள்ளது. nta.ac.in, ntaneet.nic.in என்ற இணையத்தில் சென்று மாணவர்கள் நீட் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். ஆனால் ஒரே நேரத்தில் பலரும் இந்த வெப்சைட்ட்டிற்குள் சென்றுள்ளதால் தற்போது ஓய்வு நிலையை அடைந்திருக்கின்றது. மீண்டும் சரியாக இன்னும் சிறிது நேரம் ஆகும். சில டெக்னிகல் பிரச்சினை ஏற்பட்டிருப்பதாக சொல்லப்பட்டு இருக்கிறது.
இன்னும் சில நிமிடங்களில் இயல்பு நிலைக்கு வரும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இன்று காலை 10 மணியில் இருந்து நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் நீட் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்வதற்காக காத்திருந்தார்கள். இந்த நிலையில் தற்போது முடிவு வெளியாகியுள்ளது.