வெள்ளரிக்காய் தயிர் பச்சடி செய்ய தேவையான பொருட்கள்:
வெள்ளரிக்காய் – 1
கெட்டித் தயிர் – 1 கப்
காய்ந்த மிளகாய் – 1
எண்ணெய் – தேவைக்கேற்ப
கடுகு – தேவைக்கேற்ப
கருவேப்பிலை – தேவைக்கேற்ப
மல்லித்தழை – தேவைக்கேற்ப
செய்முறை:
வெள்ளரிக்காயை நன்கு கழுவி தோல் நீக்கி அதனை சிறிது சிறிதாக வெட்டி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் வெட்டிய வெள்ளரிக்காய், உப்பு, காய்ந்த மிளகாயை சேர்த்து அப்படியே பத்து நிமிஷம் மூடி வைக்கவும்.
சாப்பாட்டிற்கு ஐந்து நிமிடத்திற்கு முன்பாகவே மூடி வைத்திருக்கும் வெள்ளரிக்காயுடன், தயிரையும் சேர்த்து நன்கு விரவி கொள்ளவும்.
வாணலியில் தேவையான அளவு எண்ணெய் விட்டு கடுகு, கருவேப்பிலை, கொத்தமல்லி தழை போட்டு தாளித்து, அதனுடன் ஊறவைத்த வெள்ளரிக்காயையும் சேர்த்து நன்கு கிளறினால் வெள்ளரிக்காய் தயிர் பச்சடி தயார்.