Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

அப்டியா? இந்த குழம்பு…தஞ்சாவூர்ல ஸ்பெஷலா…செஞ்சிட்டா போச்சி…!!

தஞ்சாவூர் ஸ்பெஷல் உருண்டை குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:

துவரம்பருப்பு                     – 200 கிராம்
சின்ன வெங்காயம்         –  200 கிராம்
சோம்பு                                   – ஒரு டீஸ்பூன்
மிளகாய்தூள்                      – தேவைக்கேற்ப
மல்லி தூள்                            – தேவைக்கேற்ப
தேங்காய்                              – அரை மூடி
எண்ணெய்                               – தேவைக்கேற்ப
புளி                                           – எலுமிச்சை அளவு
பூண்டு                                     – மூன்று பல்
தக்காளி                                 –  2
உப்பு                                        – தேவைக்கேற்ப
வெந்தயம்                             – ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை                   – சிறிதளவு

செய்முறை:

துவரம் பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைத்து பிறகு தண்ணீரை வடிகட்டி மிக்ஸியில் உப்பு, பூண்டு சேர்த்து வடைக்கு அரைக்கும் பதத்தில் அரைத்து எடுக்கவும்.

மிஸ்சி ஜாரை எடுத்து அதில் சின்ன வெங்காயம், நறுக்கிய தக்காளி, துருவிய தேங்காய், சோம்பு சேர்த்து அரைத்து வைத்து கொள்ளவும்.

அதனுடன் துவரம் பருப்பு 100 கிராம், நறுக்கிய சின்ன வெங்காயம், முருங்கைக் கீரையையும் சேர்த்து பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி இட்லி பானையில் வைத்து அவித்து எடுத்து வைத்து கொள்ளவும்.

அடுப்பில் பாத்திரத்தை வைத்து காய்ந்ததும் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெந்தயம், சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, தக்காளி ஆகியவைகளை ஒன்றின் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

பின்பு சிறிது மஞ்சள் தூள், தேவையான உப்பு சேர்த்து கூடவே புளி கரைசலையும் ஊற்றி தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து இரண்டு கொதி கொதிக்க விடவும்.

இறுதியில், அரைத்து வைத்திருக்கும் பருப்பு உருண்டைகளை அதில் போட்டு சிறிது நேரத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து இறக்கவும். இப்போது சுவையான

Categories

Tech |