அலங்காநல்லூர் அருகே கீழக்கரை பகுதியில் களைகட்டிய சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினர்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரை, மயானக்கரை அருகே 20க்கும் மேற்பட்ட கும்பல் ஒன்று சேவல் சண்டை மூலம் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அலங்காநல்லூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து அங்கு சென்ற போலீசார் சேவல் சண்டையில் ஈடுபட்ட கும்பலை நோக்கி விரட்டிசென்றபோது போலீசார் வருவதை அறிந்த சுதாகரித்துக்கொண்டு சூதாட்ட கும்பல் சேவல்களை தூக்கிக் கொண்டு தங்களது இரு சக்கர வாகனங்களை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடினர். இதனையடுத்து 13 2சக்கர வாகனங்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.