அமெரிக்காவில் ஒரு வீட்டின் மேற்கூரையில் சுற்றித்திரிந்த 18 அடி நீளமுள்ள ராட்சச மலைப்பாம்பு பிடிபட்டது.
அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரில் டெவின் ஜோன்ஸ் என்பவர் தனது வீட்டில் மலைப்பாம்பு ஒன்றினை துளியும் பயமில்லாமல் வளர்த்து வந்தார். இந்த ராட்சச மலைப்பாம்பு சுமார் 18 அடி நீளம் கொண்டது. இது அங்கிருந்து தப்பித்து சில தெருக்கள் தொலைவிலிருந்த ஒரு வீட்டின் மேற்கூரையில் சுற்றித் திரிந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த டெவின் விரைந்து வந்து வீட்டின் மேற் கூரையில் ஏறி அதை லாவகமாக பிடித்தார். பின்னர் அந்தப் பாம்பை மீண்டும் தனது வீட்டுக்குக் கொண்டு சென்றார். இந்நிலையில் பாம்பை வளர்ப்பதில் கவனமின்றி செயல்பட்டதாக் கூறி டெவின் மீது டெட்ராய்ட் நகர காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.