அமெரிக்காவில் நேற்று புதிதாக 70,000தீர்க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது உலக நாட்டு மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வுகாண் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் இன்று 215 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் மூன்று மாதங்களுக்கு உச்ச நிலையை அடைந்த பின்னர் கொரோனா வைரஸ் குறைந்து வருவதாகவே எல்லா நாட்டின் சமீபத்திய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. உலகம் முழுவதும் 3 கோடியே 95 லட்சத்து 73 ஆயிரத்து 43 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு, 11 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 2 கோடியே 96 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மூன்று – நான்கு மாதங்கள்:
உலக அளவில் கொரோனாவில் மையமாக வல்லரசு நாடான அமெரிக்கா விளங்குகிறது. அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியா, பிரேசில், ரஷ்யா அடுத்தடுத்த இடங்களில் தொற்று அதிகம் உள்ள நாடுகளாக இருக்கின்றன.கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நாடுமே மூன்று – நான்கு மாதங்கள் தொற்றில் உச்ச நிலையை அடைந்து பின்னர் படிப்படியாக குறைவதைத்தான் தினசரி புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. ஆனால் அமெரிக்காவில் மட்டும் தொடர்ந்து உச்சம் பெற்ற பின்னர் குறைந்தது தற்போது மீண்டும் வேகம் எடுத்துள்ளது.
என்ன நடக்கின்றது?
உலக சுகாதார கட்டமைப்பில் அமெரிக்காவை அடித்துக்கொள்ள எவருமில்லை, வல்லரசு நாடு, அனைத்து செல்வங்களும் உள்ள நாடு, கல்வியறிவு தொடங்கி அனைத்து வகையிலும் அமெரிக்கா ஒரு உச்ச நிலையில் உள்ள நாடு எப்படி இவ்வளவு கவனக்குறைவாக இருக்கின்றது ? என்று உலக நாடுகளில் உள்ள பலரும் வியக்கின்றனர். மாஸ்க் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று சொன்னால் அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய அறியாமையில் இன்னும் அமெரிக்கா உள்ளதா எனவும் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
புதிதாக 70,000பேர் பாதிப்பு:
கடந்த ஒரு மாதமாகவே அமெரிக்காவுக்கு இணையாக இந்தியாவில் கொரோனா உச்சம் தொட்டு இருந்தது. ஒவ்வொரு நாளும் இந்தியாவில் 70 ஆயிரம், 80 ஆயிரம், 90 ஆயிரம் என தொற்று பதிவாகிய காலகட்டங்களில் அமெரிக்காவில் குறைய தொடங்கி 30 ஆயிரம், 25 ஆயிரம் வரை சென்று தற்போது மீண்டும் 70,000 என்ற உச்ச நிலையை அடைந்துள்ளது.இந்தியாவில் நேற்று 65 ஆயிரத்து 186 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், அமெரிக்காவில் நேற்று 71 ஆயிரத்து 687 பேர் புதிதாக கண்டறியப்பட்டுள்ளது.
உலக மக்கள் வியப்பு:
பொருளாதாரத்தில் பின்தங்கி, அடிப்படை கல்வி அறிவு கூட இல்லாத பல நாட்டு மக்கள் கொரோனா பேரிடர் தொடங்கிய காலத்தில் இருந்து தற்காத்துக்கொள்ள முறையாக முக கவசம், தனிமனித இடைவெளியை கடைபிடித்து கொரோனா பரவலை தடுத்து, கொரோனா வேகத்தை கட்டுப்படுத்தி கொண்டிருக்கின்ற இந்த நிலையில் கால கட்டத்தில் அமெரிக்காவில் மட்டும் ஏன் ?இப்படி தொடர்ந்து உயர்ந்து வருகின்றது என நாட்டு மக்கள் வியப்பில் இருந்து வருகின்றனர்.