Categories
இந்திய சினிமா சினிமா

என்ன வெறும் நடிகைன்னு மட்டும் நினைசீங்களா ? அதுக்கும் மேல…. குத்துசண்டை போடும் பிரபலம் ….!

அதிரடி நடிகையாக உருவாகும் கங்கனா ரனாவத் தீவிர சண்டை பயிற்சியில் இறங்கி உள்ளார்.

கங்கனா ரனாவத்  ஹிந்தி திரைப்பட நடிகையும் மாடல் அழகியாகவும் வளம் வரும் இவர்  2006-ம் ஆண்டு முதல் திரைப்படமான “கேங்ஸ்டர்” என்னும் ஹிந்தி திரைப்படத்தில் அறிமுகமானார்.  2008ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த தாம் தூம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தற்போது ரஸ்னீஷ் ராஸி காய் இயக்கும் தக்காட் படத்தில் உளவாளியாக நடித்துள்ளார்.

சர்வேஷ் மேவரா இயக்கும் தேஜஸ் திரைப்படத்தில் விமானப்படை விமானியாக நடித்து வரும் நிலையில், மணிகர்னிகா திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு, பாலிவுட்டுக்கான முதல் அதிரடி நடிகையாக  கங்கனா ரனாவத் அடுத்தடுத்து நடிக்கும் 2 ஆக்சன் திரைப்படங்களுக்காக தீவிர சண்டை பயிற்சியில் ஈடுபட்டு வரும் வீடியோவை நடிகை கங்கனா ரனாவத் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.அதில் அனைவரும் வியக்கும் வகையில் சண்டை செய்து உள்ளார். அதனை ரசிகர்கள்  பார்த்து ரசித்து வருகின்றனர்.

Categories

Tech |