பிலிப்பைன்சில் நாட்டின் பொடீகா நகரில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 8 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
பிலிப்பன்ஸ் நாட்டின் பொடீகா நகரில் நேற்று திடீரென சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளி 1 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் அந்நகரில் உள்ள பெரிய அடுக்குமாடி கட்டடங்கள் பயங்கரமாக குலுங்கியது. அதனால் அந்த பகுதியில் குடியிருந்த மக்கள் பயத்தில் உறைந்து போனார்கள்.
இதேபோல் பிலிப்பைன்ஸ் தலைநகரான மனிலாவிலும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் சுவர் இடிந்து விழுந்ததில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உடல்நசுங்கி உயிரிழந்தனர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிக்கு சென்று பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.