Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ராமநாதபுரம் அரண்மனையில் நவராத்திரி விழா – பொதுமக்களுக்கு அனுமதி இல்லை…!!

ராமநாதபுரம் அரண்மனையில் நடைபெறும் நவராத்திரி விழாவில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என அரண்மனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

ராமநாதபுரம் சேதுபதி மன்னர் சமஸ்தானம் சார்பில் ராமநாதபுரம் அரண்மனையில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா 10 நாட்களுக்கு கோலாகலமாக நடைபெறும். கடந்த 300 ஆண்டுகளாக அங்கு நவராத்திரி விழா நடந்து வருகிறது. இந்த பத்து நாட்களில் ஒவ்வொரு நாளும் சிறப்பு கலை நிகழ்ச்சிகள், ஆன்மீக சொற்பொழிவுகள், இசைக்கச்சேரிகள், பொம்மலாட்டம், கொலு போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம்.

இதனை பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் தினம்தோறும் கண்டு ரசிப்பார்கள். கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு ராமநாதபுரம் அரண்மனையில் நவராத்திரி விழா பக்தர்கள் இன்றி எளிமையாக நடைபெறும் என அரண்மனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. வழக்கமாக நடத்தப்படும் கலை நிகழ்ச்சிகள் இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும். மக்கள் வீட்டில் இருந்தபடி நவராத்திரி விழாவை கொண்டாட வேண்டுமென்றும் அரண்மனை நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Categories

Tech |