தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ஆயிரத்து 464 ரூபாய் விலை குறைந்து 37 ஆயிரத்து 440 ரூபாய் விற்கப்படுகிறது.
கொரோனா காலகட்டத்தில் தொடர்ச்சியாக தங்கத்தின் விலை உயர்ந்த வண்ணம் இருந்தது. ஒரு சவரன் தங்கம் 42 ஆயிரத்தை தாண்டி விற்பனை செய்யப்பட்ட நிலையில் கடந்த ஒரு மாத காலமாக தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வந்ததை நாம் பார்த்து இருக்கின்றோம். அந்த வகையில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ஆயிரத்து 464 ரூபாய் விலை குறைந்திருக்கிறது.
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,464 குறைந்து ரூ.37,440க்கு விற்பனை செய்யப்படுகின்றது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 183 குறைந்து ரூ.4680க்கு விற்பனை செய்யப்படுகின்றது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 40 காசு குறைந்து ரூ.65.40க்கு விற்பனை செய்யப்படுகின்றது.