நவராத்திரி விழாவையொட்டி நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இந்துக்களின் முக்கிய திருவிழாவாகக் கொண்டாடப்படும் நவராத்திரி விழா இன்று தொடங்கப்பட்டுள்ளது. இந்த விழாவையொட்டி, அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள், உற்சவங்கள் மற்றும் கொலு காட்சிகள் அனைத்தும் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் நாட்டு மக்கள் அனைவருக்கும் நவராத்திரி வாழ்த்துக்களை தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர். நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்தியில், ” நவராத்திரியின் முதல் நாளான இன்று அன்னை பார்வதியை நான் வணங்குகிறேன்.
அன்னையின் ஆசியைப் பெற்று, நமது பூமியை பாதுகாப்பாகவும், நல்ல ஆரோக்கியமாகவும், வளமாகவும் இருக்க வேண்டும். ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையில் அவர்களுக்கு சாதகமான மாற்றத்தை கொண்டு வருவதற்கு அன்னையின் ஆசீர்வாதங்கள் நமக்கு பலன் அளிக்கும்” என்று அவர் கூறியுள்ளார். அதுமட்டுமன்றி மாதா சைலபுத்ரி போற்றும் ஒரு பாடலுடன் கூடிய புகைப்பட வீடியோ ஒன்றையும் பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.