Categories
தேசிய செய்திகள்

பீகாரில் சூடு பிடிக்கும் தேர்தல் பிரசாரம்… 12 பொது கூட்டங்களில் பேசும்… பிரதமர் மோடி…!!!

பீகாரில் சட்டசபை தேர்தலையொட்டி பிரதமர் நரேந்திர மோடி 12 பொதுக் கூட்டங்களில் பங்கேற்று பிரசாரம் மேற்கொள்கிறார்.

பீகாரில் 243 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபைத் தேர்தல் வருகிற 28-ஆம் தேதி, அடுத்த மாதம் 3 மற்றும் 7ம் தேதிகளில் மூன்று கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்தத் தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணி ஒரு அணியாகவும், காங்கிரஸ் கூட்டணி மற்றொரு அணியாகவும் போட்டியிடுகின்றன. சட்டசபை தேர்தல் நெருங்கி வருகின்ற நிலையில், பீகார் முழுவதும் தேர்தல் பிரசாரம் நடந்து வருகிறது.

இந்நிலையில் ஐக்கிய ஜனதா தளம், பாரதிய ஜனதா கூட்டணியை ஆதரிக்கும் வகையில் வருகின்ற 23, 28 நவம்பர் 1, 3 ஆகிய தேதிகளில் பிரதமர் நரேந்திர மோடி பீகாரில் பிரசாரம் செய்ய உள்ளார். அந்தத் தேர்தல் பிரசார சுற்றுப் பயணத்தில் மொத்தம் 12 பிரசார பொதுக் கூட்டங்களில் பிரதமர் பங்கேற்று உள்ளார். பிரதமர் மோடியின் வருகையால் பாரதிய ஜனதா மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியினர் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

Categories

Tech |