Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

பேபிகார்ன் வேர்க்கடலைக் காரக்குழம்பு…செய்வது எப்படி?

பேபிகார்ன் வேர்க்கடலைக் காரக்குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:

வேர்கடலை                    – 2 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லி தழை   – ஒரு பிடி
பூண்டு                               – 4 பல்
புளி                                      – எலுமிச்சை அளவு
பச்சை மிளகாய்           – 2
தக்காளி                            – ஒன்று
உப்பு                                   – தேவையான அளவு
கறிவேப்பிலை              –  சிறிது
வெங்காயம்                    – ஒன்று நறுக்கியது
சாம்பார் பொடி             – இரண்டு டீஸ்பூன்
நல்லெண்ணெய்          – ஒரு டேபிள்ஸ்பூன்
அரிசி ஊறிய நீர்           – ஒரு கப்
தேங்காய் பால்              – அரை கப்

செய்முறை:

முதலில் சாம்பார் தூளை தக்காளியுடன் சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். அரிசி ஊற வைத்த நீரில் புளியை போட்டு கெட்டியாக கரைத்து வைத்துக் கொள்ளவும்.பேபிகார்னை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கருவேப்பிலை போட்டு தாளித்து அதனுடன் வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

அதனை தொடர்ந்து அரைத்து வைத்திருக்கும் தக்காளி விழுதினை சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும்.

அனைத்தும் வதக்கிய பின் புளிக்கரைசலை ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடவும். குழம்பு கெட்டியாகி எண்ணெய் மேலே மிதக்கும் போது தேங்காய் பாலை ஊற்றி கிளறவும்.

இறுதியில் குழம்பு நன்கு கொதித்ததும், நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். இப்போது சுவையான பேபிகார்ன் வேர்க்கடலை காரக்குழம்பு ரெடி.

Categories

Tech |